பார்ப்பது CSKவுக்கு எடுபிடி வேலை.. செய்தியாளரை தாக்கி விட்டு தன்னை ஜனாதிபதி என்ற ரிட்டையர்டு போலீஸ்.. இவர்களுக்கு எல்லாம் கட்டுப்பாடு இல்லையா..?
May 15, 2024
1470
சென்னை விமான நிலையத்தில் பெங்களூரு சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை படம் பிடிக்க கூடாது என்று செய்தியாளரை தடுத்து தாக்கிய ஓய்வு பெற்ற உதவி ஆணையர் மோகன்ராஜ், தன்னை இந்திய ஜனாதிபதி என்று கூறிச்சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது...சென்னை விமான நிலையம் வந்திறங்கிய தோனியை படம் பிடிக்க விடாமல் செய்தியாளரை தடுத்த ரிட்டையர்டு காவல் அதிகாரி மோகன்ராஜ் இவர் தான்..!பெங்களூருவில் நடக்க இருக்கின்ற ஐ.பி.எல் போட்டிக்கு செல்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இரு பேருந்துகளில் சென்னை விமான நிலையம் வந்திறங்கினர்.அங்கு மஞ்சள் பனியனுடன் வந்திருந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆணையர் மோகன்ராஜ் என்பவர் இங்கே படம் பிடிக்க கூடாது என்று எச்சரித்து விரட்டினார்.சென்னை அணியில் வீரர் களை படம் பிடித்த செய்தியாளரை நோக்கி கைகளால் தாக்கி தடுத்த மோகன்ராஜ், தோனியை படம் பிடிக்கவிடாமல் தடுத்த தோடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளரை ஒறுமையில் அழைத்தார்.தோனியை கண்டதும் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர், செய்தியாளர்களை தடுத்த திருப்தியில் ஓடிச்சென்று டோனியிடம் சென்று தனது வீர தீர சாகசத்தை பகிர்ந்து கொண்டார் மோகன்ராஜ்.வெளியே வந்த மோகன்ராஜிடம் செய்தியாளர்களை தடுக்க நீங்கள் யார் ? என்று கேள்வி எழுப்பியதும், தன்னை அவர் இந்திய ஜனாதிபதி என்றும் தனது பெயர் ராஜேந்திர பிரசாத் வர்மா என்று பெயரை மாற்றிக் கூறிவிட்டு ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து சென்றார்.தனியார் செக்கியூரிட்டி நிறுவனத்தில் பணியில் உள்ள ரிட்டையர்டு ஏசி மோகன்ராஜ் தனது அடையாள அட்டையை மஞ்சள் பனியனுக்குள் மறைத்துக் கொண்டு செய்தியாளரை தடுத்து தாக்கியதுடன், தன்னை இந்திய ஜனாதிபதி என்று மோசடியாக கூறிச்சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வாழ்நாள் முழுதும் தோனிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்
Mar 17, 2024
689
2008-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடத் தேர்வானதுதான் தனது வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது என்றும், வாழ்நாள் வரை தோனிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.100 டெஸ்டுகளில் விளையாடி 516 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சேப்பாக்கம் மைதானத்தில் அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.செங்கோல், 500 தங்கக் காசுகள் பொறித்த கேடயம், ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை ஆகியவை அஸ்வினுக்கு வழங்கப்பட்டன.
வாழ்நாள் முழுதும் தோனிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்
Mar 17, 2024
689
2008-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடத் தேர்வானதுதான் தனது வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது என்றும், வாழ்நாள் வரை தோனிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.100 டெஸ்டுகளில் விளையாடி 516 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சேப்பாக்கம் மைதானத்தில் அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.செங்கோல், 500 தங்கக் காசுகள் பொறித்த கேடயம், ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை ஆகியவை அஸ்வினுக்கு வழங்கப்பட்டன.
மார்ச் 22-ஆம் தேதி துவங்குகிறது இந்தாண்டின் ஐ.பி.எல்..!
Feb 22, 2024
589
சென்னையில் இந்தாண்டின் முதல் ஐ.பி.எல். ஆட்டம்மார்ச் 22-ஆம் தேதி துவங்குகிறது இந்தாண்டின் ஐ.பி.எல்.2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல்முதல் ஆட்டம் மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிப்புமுதல் 17 நாட்களில் நடைபெறும் 21 ஆட்டங்களுக்கான பட்டியலை வெளியிட்டது பி.சி.சி.ஐ.17 நாட்களில் 21 போட்டிகள் நடைபெற உள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவிப்பு
மார்ச் 22-ஆம் தேதி துவங்குகிறது இந்தாண்டின் ஐ.பி.எல்..!
Feb 22, 2024
589
சென்னையில் இந்தாண்டின் முதல் ஐ.பி.எல். ஆட்டம்மார்ச் 22-ஆம் தேதி துவங்குகிறது இந்தாண்டின் ஐ.பி.எல்.2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல்முதல் ஆட்டம் மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிப்புமுதல் 17 நாட்களில் நடைபெறும் 21 ஆட்டங்களுக்கான பட்டியலை வெளியிட்டது பி.சி.சி.ஐ.17 நாட்களில் 21 போட்டிகள் நடைபெற உள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவிப்பு
தோனிக்கு வெற்றிகரமாக முடிந்த முழங்காலில் அறுவை சிகிச்சை... வலிகளுக்கு நடுவே நனவான கோப்பை கனவு!
Jun 02, 2023
3162
சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, மும்பை மருத்துவமனையில் இடதுகால் மூட்டில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.ஐ.பி.எல் முழுவதும் முழங்கால் வழியால் அவதிப்பட்ட தோனி, முழங்காலுக்கு ஐஸ்பேக் வைத்து சமாளித்து விளையாடினார். ஐ.பி.எல் தொடரில், சி.எஸ்.கே அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்த கையோடு அமதாபாத்தில் இருந்து மும்பை சென்ற தோனிக்கு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.அறுவை சிகிச்சைக்கு பிறகு தோனி நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாள்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.139 கோடியில் புனரமைக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Mar 17, 2023
1674
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்ட மாடத்துடன், 139 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சேப்பாக்கம் மைதானத்தில் பழமையான மாடம் புதுப்பிக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள 31 ஆயிரம் இருக்கைகளுடன் புதிதாக 5 ஆயிரத்து 300 இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாடத்தை திறந்து வைத்த முதலமைச்சர், மைதானத்தையும் பார்வையிட்டார். சி.எஸ்.கே. அணி கேப்டன் தோனி, பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
MS தோனி குளோபல் பள்ளியின் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் மகேந்திர சிங் தோனி
Oct 10, 2022
3809
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள MS தோனி குளோபல் பள்ளியின் கிரிக்கெட் மைதானத்தை, அதன் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி திறந்து வைத்தார்.மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி பிரிவான சூப்பர் கிங்ஸ் அகாடமி உடன் இணைந்து, பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கிரிக்கெட்டின் தொழில் முறை பயிற்சி அளிக்கும் நிகழ்வும் தொடங்கப்பட்டது.
கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தபோது தோனி மட்டுமே அக்கறையுடன் விசாரித்தார் - விராட் கோலி நெகிழ்ச்சி!
Sep 05, 2022
4069
கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தபோது தோனி மட்டுமே தன்மீது அக்கறையுடன் விசாரித்ததாக விராட் கோலி மனம் திறந்துள்ளார்.ஆசிய கோப்பையில் தனது பழைய பார்மை மீட்ட விராட் கோலி, செய்தியாளர்கள் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார். தோனி தலைமையில் விளையாடும் போது, அவரது கேப்டன் பதவிக்கு தன்னை ஒருபோதும் அச்சுறுத்தலாக தோனி கருதவில்லை என்றார்.மேலும், கிரிக்கெட் பிரபலங்கள் தனக்கு அறிவுரை கூற விரும்பினால், அதனை தொலைக்காட்சி வாயிலாக கூறாமல் நேரடியாக தெரிவிக்குமாறு கோலி கேட்டுக்கொண்டார்.
லண்டனில் தனது பிறந்தநாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய எம்.எஸ்.தோனி..!
Jul 07, 2022
2376
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் 41வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.தற்போது லண்டன் சென்றுள்ள தோனி அங்கு தனது பிறந்தநாளை கொண்டாடிய காட்சிகளை அவரது மனைவி சாக்ஷி இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.அதில் தோனி கேக் வெட்டும் காட்சிகளும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.41ஆவது பிறந்த நாளை கொண்டாடும் எம்.எஸ்.தோனிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
'தல' டோனி மீது மோசடி வழக்கு.. போலீசார் அதிரடி..!
Jun 02, 2022
4531
கிரிக்கெட் வீரர் டோனியை சேர்மனாக கொண்டு இயங்கும் உர நிறுவனம் வழங்கிய 30 லட்சம் ரூபாய் காசோலை பணமில்லாமல் திரும்பியதால், டோனி மீது போலீசார் செக் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.பீகாரை சேர்ந்த DS Enterprises என்ற நிறுவனம், கிரிக்கெட் வீரர் டோனியை சேர்மனாக கொண்ட நியூ குளோபல் புரொடியூஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து உரம் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாக ஒப்பந்தம் செய்திருந்தது.இந்த ஒப்பந்தத்தின்படி, டோனியின் நியூ குளோபல் புரோடியூஸ் நிறுவனம் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உரத்தை தயாரித்து டிஎஸ் நிறுவனத்திற்கு டெலிவரி செய்தது. ஆனால், உரம் எதிர்பார்த்த அளவில் விற்பனையாகவில்லை.இதனால் விற்பனையாகாமல் இருந்த மொத்த உரங்களையும் நியூ குளோபல் உர நிறுவனம் திரும்பப் பெற்றது. அதற்கு பதிலாக தாங்கள் ஏற்கனவே பெற்ற 30 லட்சம் ரூபாய்க்காக காசோலையை வழங்கியது.அந்த காசோலையை வங்கியில் டெபாசிட் செய்தபோது, அது பணமில்லை என்று திரும்பியதாக கூறப்படுகின்றது. இதுதொடர்பாக, டோனியின் நியூ குளோபல் நிறுவனத்திற்கு டிஎஸ் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு டோனியின் நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.இந்நிலையில் டிஎஸ் எண்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளர் நீரஜ் குமார் நிராலா, நியூ குளோபல் நிறுவனத்தின் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தனர் . நீதிமன்ற உத்தரவின்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் நியூ குளோபல் நிறுவன சேர்மன் டோனி, தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஆர்யா உள்பட 8 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த நியூ குளோபல் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்ததால் இவ்வழக்கில் அவரின் பெயரும் சேர்க்கப்பட்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில் இந்த நிறுவனத்திற்கு சேர்மனே டோனி தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.இந்த செக்மோசடி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இதன் விசாரணையை வரும் ஜூன் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கிரிக்கெட்டில் கிடைத்த புகழ் மூலம் விளம்பரங்களில் நடித்து பல நூறு கோடிகளை குவித்துள்ள டோனிக்கு எதிராக 30 லட்சம் ரூபாய் செக்மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாகிறார் டோனி..!
Apr 30, 2022
11155
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனியே மீண்டும் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா, ஆட்டத்திறனில் கவனம் செலுத்தும் வகையில் தனது பொறுப்பை தோனியிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முதலாவது ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணியை தோனியே வழிநடத்திய நிலையில், நடப்பு தொடரில் அவர் கேப்டன் பதவியை ஜடேஜாவுக்கு விட்டுக் கொடுத்தார். இந்நிலையில், நடப்பு தொடரில் அணி தொடர் தோல்வி கண்டு வரும் நிலையில் மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்கவுள்ளார்.
சென்னை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது -பாராட்டு விழாவில் தோனி உரை
Nov 20, 2021
7241
தமிழ்நாடு மற்றும் சென்னை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது - சென்னையில் பாராட்டு விழாவில் தோனி பேச்சுஎன் முதல் டெஸ்ட் போட்டியை சென்னையில் தான் விளையாடினான்என்னுடைய கடைசி டி20 சென்னையில் தான் நடக்கும் என நம்புகிறேன்கடைசி போட்டி அடுத்த வருடமா அல்லது ஐந்து வருடமா என தெரியவில்லை..!
இந்திய அணியின் ஆலோசகராக பணியை தொடங்கிய முன்னாள் கேப்டன் தோனி
Oct 18, 2021
6203
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட முன்னாள் கேப்டன் தோனி, தன்னுடைய பணியினை தொடங்கியுள்ளார்.20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் 24-ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது.இந்நிலையில், அணியின் வலைப்பயிற்சி நேற்று தொடங்கியதை அடுத்து, பேட்டிங் உள்ளிட்டவை தொடர்பான ஆலோசனைகளை தோனி வழங்கினார். மேலும், தோனியை வரவேற்கும் விதமாக, புதிய பணியுடன் இந்திய அணியில் தோனி இணைந்து விட்டதாக பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது.
சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி... பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாட்டம்.!
Oct 16, 2021
6301
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதை ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.துபாயில் நடந்த இறுதி ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்று சென்னை அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.வெற்றி மகிழ்ச்சியில் திளைத்த ரசிகர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News